By

செயற்கை நுண்ணறிவு – நேர்மையான படைப்புச் செயல்முறை

“செயற்கை நுண்ணறிவிலிருந்து விரும்பிய வெளியீட்டைப் பெறுவதற்காக உள்ளீட்டை வடிவமைக்கும் செயலாக்கம், விரைவில் ஒரு முறையான கலை வடிவமாகக் கருதப்படலாம்”

– கட்டுரையிலிருந்து.

The Prompt Engineer Is the Artist of Our Age | The MIT Press Reader

சமீபத்தில் இலக்கிய நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துபவர்களைச் சார்ந்த அறிவுசார் திருட்டு போன்ற விமர்சனங்களைத் தொடர்ந்து கேட்க முடிந்தது. செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் உள்ளடக்கத்தை அப்படியே நகலெடுத்து ஒட்டும் சோம்பேறித்தனமும், நேர்மையற்ற அணுகுமுறையும் கொண்டவர்களைப் பொறுத்தவரை, அந்த விமர்சனம் புரிந்துகொள்ளக்கூடியதே.

ஆனால், இந்த விவாதத்தில் நாம் ஒன்றை கவனிக்காமல் எளிதாகக் கடந்து விடுகிறோம். ‘Prompt’ உருவாக்குவதிலும் ஒரு படைப்பாற்றல் கொண்ட செயல்முறைத் தேவைப்படுகிறது. நாம் எவ்வளவு சிந்தனையுடனும் படைப்பாற்றலுடனும் ‘Prompt’ ஐ வடிவமைக்கிறோமோ, அதற்கேற்ப சிறந்த முடிவுகளைப் பெறுவதை நம்மால் காண முடிகிறது. தற்போது இந்த ஊடகம் மனித மனத்தின் நுட்பமான வெளிப்பாடுகளை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்றாலும், வருங்காலங்களில் ஒரு கலைஞன் எதிர்பார்க்கும் ஊடகமாக மாறக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவே கருதுகிறேன்.

கலைஞர்களாக, நாம் பல்வேறு ஊடகங்களை முயற்சித்து, அவற்றின் வழியாக நம்மை வெளிப்படுத்துகிறோம். வண்ணங்களையும் சொற்களையும் போன்று தரவு, தர்க்கம் வழியாக இயங்கும் செயற்கை நுண்ணுணர்வும் வருங்காலங்களில் நம்பிக்கைமிக்க செயல்முறையாகலாம்.

செயற்கை நுண்ணறிவு பின்னாலும் ஒரு நேர்மையானப் படைப்புச் செயல்முறை இருக்கக் கூடும் என்பதை உலகின் சில குரல்கள் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன.

– ஆர். கே. ஜி

Leave a Reply

About the blog

RAW is a WordPress blog theme design inspired by the Brutalist concepts from the homonymous Architectural movement.

Get updated

Subscribe to our newsletter and receive our very latest news.

← Back

Thank you for your response. ✨