
அ. முத்துலிங்கம் அவர்களின் பல சிறுகதைகளில், குறிப்பாக ‘தொடக்கம்’ போன்ற படைப்புகளில், பறவைகள் பற்றிய கூர்மையான அவதானிப்பை நம்மால் கவனிக்க முடியும். இதனையொட்டி, பறவைகளை மையமாகக் கொண்டு நான் எழுதிய கவிதைகளை அ. முத்துலிங்கம் அவர்களிடம் இன்று பகிர்ந்தேன்.
அவற்றை வாசித்து அவர் என்னிடம் அனுப்பிய செய்தி:
“எனக்குப் பிடித்தது.
ஒன்று பழத்தை சாப்பிட்டது.
மற்றது பார்த்துக்கொண்டிருந்தது.
இதுதான். உலகம் முழுக்க நடப்பது.
மிக நல்ல கவிதை.”
– அ. மு
இரண்டு பட்சிகள்
பிரியாத இரண்டு பறவைகள்
ஒரே மரத்தில் அமர்ந்திருந்தன
ஒன்று பழத்தைச் சாப்பிட்டது.
மற்றொன்று
ஒன்றும் செய்யாமல்
அப்படியே
பார்த்துக் கொண்டு மட்டும் இருந்தது.
யாரும் தன்னைப் பற்றிப் பேசாததால்
கோபமடைந்த மரம்
சலிப்புடன்
தன் கிளையிளிலிருந்த
அந்த இரண்டு பறவைகளையும்
உதறித் தள்ளியது.
எஞ்சியிருந்த
அப்பறவைகளிள் இறகுகளையும்
சில காலம் கழித்து
காற்று அடித்துச் சென்றது.
– ஆர். கே. ஜி
Leave a Reply