By

கார்மேனி – 2

2020-ல் என் மனைவியும் நானும் டொரோண்டோவை வந்தடைந்தோம். அப்பொழுது எங்களிருவரில் ஒருவருக்கே முழுநேர வேலை இருந்தது. எதிர்பார்த்தது போல், வீட்டு வாடகைக்கு எங்கள் விண்ணப்பத்தை யாரும் பேருக்குக்கூட மதிப்பாய்வு செய்யவில்லை. சலிப்பான அக்காலத்தில்தான், 425 அவென்யூ கட்டிட மேற்பார்வையாளர் கிறிஸ்டினை சந்தித்தோம்.

“நேரடியாகச் சொல்கிறேன். எல்லோரும் ஏதாவது ஒரு இடத்தில் துவங்க வேண்டும். இதற்குமேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. நீங்களாவது உதவி செய்யுங்கள்”

கிறிஸ்டின் கரிபியத் தீவுகளுள் ஒன்றைச் சேர்ந்தவள். என் பேச்சைக் கேட்டு சிரித்தாள். பொதுவாகக் கறுப்பினப் பெண்களிடம் காணப்படும் அதிகாரமும் மென்மையும் கலந்த தொனி அவளிடமும் இருந்தது. அவள் தயவால் எங்களுக்கு டொரோண்டோவில் முதல் வீடு அமைந்தது.

சில ஆண்டுகளுக்குப் பின், ஹென்றி டூமாஸ் (Henry Dumas) கவிதையில் இடம்பெறும் அந்த உறுதியான அன்னையில் நான் கிறிஸ்டினை மீண்டும் கண்டடைந்தேன்.

“என் கருப்பு அன்னை

நல்ல அழகி.

என்னைக் குளிப்பாட்டியவள்.

எனக்காக உயிரைத் துறந்தவள்.

என்னை ஒன்றாகத் தைத்தவள்.

மார்பில் அணைத்து கொண்டு

அவளது கண்ணீரை

என் கண்ணீருடன் கரைத்தவள்.

நான்

பரிதாபமாக

உடலற்ற நிழல் போல

தந்தையற்று

ஒளியற்று இருந்த போது

என் கருப்பு அன்னை தான்

எனக்காக இனிமையான

பாடல்களைப் பாடி

என் உடல் முழுவதும்

அவளது வியர்வையைப் பூசியவள்.

அவள் அளித்த சர்க்கரையும்

அவள் அளித்த உப்பும்தான்

என்னைக் காத்தன.”

– ஆர். கே. ஜி

Leave a Reply

About the blog

RAW is a WordPress blog theme design inspired by the Brutalist concepts from the homonymous Architectural movement.

Get updated

Subscribe to our newsletter and receive our very latest news.

← Back

Thank you for your response. ✨