
“பொதுவாக எழுத்துலகில் தொடங்கி பின்னர் சினிமாவுக்குச் செல்வதே பலரின் பயணமாக இருக்கும். ஆனால், சினிமாவில் தொடங்கி இலக்கியத்தில் வந்தடைந்தவர் அசோகமித்திரன் மட்டுமே.”
சமீபத்தில் டொரோண்டோ வெங்கட் அவர்களுடன் உரையாடியபோது அவர் சுட்டிக்காட்டியது.
இரண்டு துறைகளும் வெவ்வேறு கலை வடிவங்களாக இருந்தாலும், கவர்ச்சியாலும் பொருளாதார ஆதிக்கத்தாலும் ‘சினிமா’ தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒருவழிப் பாதையாகப் போய் விட்டது.
அனாயாசமாக நகரங்களின் வரலாறுகளையும் அன்றாட மனித அனுபவங்களையும் எழுத்தில் பதிவு செய்ததோடு, மிகைப்படுத்தல்கள் அற்ற ஒரு எழுத்து மரபை தமிழில் உருவாக்கியவர் அசோகமித்திரன்.
இன்றைய தமிழ் எழுத்து, குறிப்பாக நாவல்கள், காவியத்தன்மையை (Epicness) நோக்கி தம்மை கட்டமைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அசோகமித்திரனின் எழுத்து அதற்கு நேர்மாறான காவியத்தன்மையை உடைக்கும் ஒரு அழகியலாக அமைந்தது. என் யூகம், புராணங்களை நவீனப்படுத்தும் முயற்சிகளில் அவர் பெரிதும் ஈடுபடாமல் இருந்ததற்கு இது ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். கவித்துவத்திற்கு, காவியத்தன்மைக்கு எதிராக இயங்கும் இப்போக்கை ஒரு வித ‘அபத்த தரிசனம்’ என நாம் கொள்ளலாம்.
எழுத்தை, முழு நேர்மையுடன் அணுகிய, நான் பெரிதும் கொண்டாடும் மதிப்பிற்குரிய எழுத்தாளர் அசோகமித்திரனின் பிறந்த நாள் இன்று. அவர் நினைவாக இச்ச்சிறு குறிப்பு.
– ஆர். கே. ஜி
Leave a Reply