
அவர்கள்
ஒரு பெரிய கோடரியால்
யானையின் தந்தத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
வெப்பம்
யானையை எவ்வகையிலும் பாதிக்காதிருக்க
தண்ணீரைத் தந்தத்தின் மேல்
இடைவிடாமல் பாய்ச்சினார்கள்.
யானை
தன் பற்களை
யாரோ இதமாகத் துலக்குவது போல
ஒரு விசித்திரமான இன்பத்தை அடைந்தது.
பல மணிநேர உழைப்பிற்குப் பிறகு
அவர்கள்
தாங்கள் விரும்பிய
வடிவானத் தந்தத்தைப் பெற்றார்கள்.
தான் இத்தனைக் காலம் வளர்த்த
ஒன்றின் பாதியை இழந்தும்
அந்த யானை
பற்களில் பூச்சு பூசப்பட்டு
எதுவும் நிகழாதது போல
உற்சாகத்துடன் நின்றது.
வன்முறையானது
இப்படி
இரு தரப்பிற்கும்
இன்பமாக அமைந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்.
– ஆர். கே. ஜி
Leave a Reply