லௌகீக ஞானம்(நி)

இலக்கியம் ஒற்றைக் குரலாக மாறாமல், ஓர் பரந்த வெளி நோக்கி செல்ல, ஆசிரியன் முதன்மையில் தன்னைக் கடக்க வேண்டியுள்ளது. படைப்பைக் கலையாக்க, அவன் உதிர்க்கும் பகட்டான சித்தரிப்புகளும், உருவகம், உவமம் யாவும் புறம் தரும் உண்மைக்குத் திரையாக மாறிவிடுகின்றன. புறம் எனும் நிகழ்தலின் வழி, காட்சிகளாய் நாம் அடையும் சாராம்சமே அகம். பெரும்பான்மையான எழுத்தாளர்கள் புறத்தின் குரலுக்கு முழுமையாகப் புலன் சாய்க்காமல், உள்ளத்தில் எழும் உணர்வுப் பிரவாகத்திற்கு (Stream of consciousness) புறத்தைத் தடையாகக் கொள்கின்றனர். பல…