ஓலையில் வேய்ந்த சொற்கள்

எழுத்தை அனுகுவதில் இரு பிரிவு உண்டு. களம், கதை, நடை என புற சித்தரிப்புகளில் ஆழ்ந்து களிப்பது ஒன்று. புறம் சார்ந்த வாசிப்பு நிச்சயம் ஒதுக்கக் கூடியதல்ல. ஆனால் புறம் எழுத்தாளன் வாசகனை படைப்பில் ஆழச் செய்யும் கருவி மட்டுமே. ‘காண்பித்தல்’ எனும் அளவில் புறத்தைக் கொள்ளலாம். இப்படி எடுத்து கொள்ளலாம். தட்டையான நடையும், சோர்வான மாந்தர்களும் கொண்ட மெய் தரிசனம் காட்டும் நாவல்களை,  சிறுகதையை நம்மிடம் தந்தால் (பேஜ் டர்னர் அல்லாத) எத்தனை பேர் படிக்கக்…

கதை சொல்லி

இடசேவல் கிராமம் இரண்டு உன்னத ஆளுமைகளை தமிழ் இலக்கியத்திற்குத் தந்துள்ளது. ஒன்று, கி. ரா என்னும் கி. ராஜநாரயணன், மற்றொன்று கு. அழகிரிசாமி. கி. ராஜநாரயணன் இலக்கியம், கரிசல் வரலாறு, சமூகம் எனப் பன்முக ஆற்றலோடு விளங்கியவர். கிளாசிக் எனப் பொதுப்படையாகிப் போன பிரோயகத்தை, கி. ராவின் கோபல்ல கிராமம் நாவலுக்கு கம்பீரமாக முடி சூட்டலாம். “கம்மவாரு என்று பெயர் வந்ததற்கு மங்கத்தாயாரு அம்மாள் சொல்லும் காரணம் … காது வளர்ந்து வளையம் போன்ற ‘கம்ம’ என்ற…

லௌகீக ஞானம்(நி)

இலக்கியம் ஒற்றைக் குரலாக மாறாமல், ஓர் பரந்த வெளி நோக்கி செல்ல, ஆசிரியன் முதன்மையில் தன்னைக் கடக்க வேண்டியுள்ளது. படைப்பைக் கலையாக்க, அவன் உதிர்க்கும் பகட்டான சித்தரிப்புகளும், உருவகம், உவமம் யாவும் புறம் தரும் உண்மைக்குத் திரையாக மாறிவிடுகின்றன. புறம் எனும் நிகழ்தலின் வழி, காட்சிகளாய் நாம் அடையும் சாராம்சமே அகம். பெரும்பான்மையான எழுத்தாளர்கள் புறத்தின் குரலுக்கு முழுமையாகப் புலன் சாய்க்காமல், உள்ளத்தில் எழும் உணர்வுப் பிரவாகத்திற்கு (Stream of consciousness) புறத்தைத் தடையாகக் கொள்கின்றனர். பல…