சண்டிகர் டு சிம்லா – சிறுகதை

ஹம்சாவின் கண்கள் அயர்ந்திருந்தன. அம்மா, அப்பாவின் மேஜைக்கருகில் காபியை வைத்தாள். அம்மா இப்போதெல்லாம் அவர் விரும்பும் காபிக்கு மேல், அலங்காரமாக பால் நுரை வைப்பதில்லை. இருவருக்குள் பேசிக்கொள்ளும் சொற்களும் சொற்பமாகி விட்டது. அப்பா வழக்கம் போல் திட்டிக் கொண்டே ஹிந்துவைப் புரட்டினார். “இவங்கப் பிரச்சனையே எல்லாத்துக்கும் ஒரு ஸ்டான்ட் எடுக்கறது தான்.” விஸ்வநாதன் தனக்கான அறையில் அமர்ந்து கொண்டு, காபியின் நெடியை நுகர்ந்தப்படியே அரை இருட்டில் பேப்பர் படிப்பது வழக்கம். “குட் மார்னிங் பா.” “மார்னிங். மார்னிங்.”Continue reading “சண்டிகர் டு சிம்லா – சிறுகதை”