ஜாஸ்

ஜாஸ் டொரண்டோவில் வேலைக்காகத் தேடிக் கொண்டிருந்த காலங்களில், சென்ட்ரல் ஸ்குவேரின் 15 – 20 அடி டிஜிட்டல் டிஸ்பிளேத் திரைகளின் கீழ் அமர்ந்து கொண்டு டண்டாஸ் சாலையில் ஏதேதோ நிலங்களிலிருந்து வந்திருந்த மக்களை நோட்டம் விடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். பறவைகளை தொலைநோக்கியில் பார்ப்பது போல், மக்களின் அசைவுகளை உன்னிப்பாக கவனிப்பது எனக்கு அக்காலங்களில் பிடித்த ஒன்றாக இருந்தது. ஜாஸ், ஹிப் ஹாப் என மால்களின் வாசலில் இலவசமாக எத்தனையோத் திறமைகளைப்  பார்க்கலாம்.  ‘பீப்பள் வாட்சிங்’ செய்து கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் தான், லூவி எனக்கு அறிமுகமானான்.Continue reading “ஜாஸ்”