Moon River

Moon River நதியால் நிலவைக் கடலிடம் சேர்க்க முடியவில்லை தன் போக்கைத் திருப்பி ஆறுதல் சொல்லவும் வழியில்லை எல்லாம் அறிந்த நிலவு தன்னை விட்டு கடந்து போகும் நதியை மன்னித்து சிரித்தது நதியில் தன் ஒளி - நிழல் விழும் அந்த ஒரு இடத்தில் நீரைக் கொத்திக் கொத்தி கணங்களை பெரு யுகமாக்கி சில நேரம் வாழ்வாங்கு வாழ்ந்தது பொழுது புலர நிதானமாக மரணிக்கும் நிலவு வானின் எதிர் திசையில் தன் அஸ்தமனத்திற்காக காத்திருந்தது அக்கணம் இனம்…

அர்த்தநாரி – கவிதை

அர்த்தநாரி   உலகில் அனைத்தும் முழுமையான வாசகங்கள் நான் மட்டும் முழுதாக எழுதப்படாதவள் பாதி அர்த்தநாரி   அபத்த வாக்கியங்களால் வெறுத்துப் போய் சுழுன்று சுழன்றுப் பித்தாக ஆடிக் களித்த பேய் ஆட்டத்தில் அனைத்தும் ஒரு நாள் மயங்கியது   காணும் யாவும் ஒளித் துகளாய் அத்தனையும் அவன் நடனமாய் மயங்கிய அந்தப் பித்த நிலையில் பிரம்மாண்டமே என்னோடு ஆடியது   அன்று முதல் கேட்ட அத்தனை வசைகளும் நிசப்தமாயின அடையாளங்கள் அழிந்த இறப்பற்ற வெளியில் முழுதாய்…

இரவு என்னும் கரும் மழை – கவிதை

இரவு என்னும் கரும் மழை அழகான மாலைகளைப் பார்க்கும் பொழுது பயமாக இருக்கிறது எனக்கு எத்தனையோ முறை அவளுடன் பேசிப் பேசி இரவுகளைக் கட்டிப் போட்ட ஞாபகம் பெரிய சித்தாந்தங்களை பேசும் பொழுது சலனமின்றிக் கன்னத்தில் கை வைத்து கேட்டுக் கொண்டிருப்பாள் அவ்வப் பொழுது பேசுவதுப் பிடித்தால் நெற்றியில் முத்தமிடுவாள் எனக்குத் தெரியும் நான் பேசும் சொற்கள் அவள் உலகம் சார்ந்தவை அல்ல இருந்தும் பேசிக் கொண்டே இருப்பேன் அக்காலங்களில் மாலை சூரியன் வானில் ஒட்டி வைத்ததுப்…

இரண்டு சொற்களின் இடையில் ஆகாசம் – கவிதை

இரண்டு சொற்களின் இடையில் ஆகாசம் நான் பேசிக் கொண்டிருக்கும் சொற்களை தியானிக்கிறேன் ஒரு ஒரு அட்சரமாகப் பிரித்துப் பார்க்க சொற்களின் வழி அடைந்த காட்சிகளும் பொருளும் உணர்வும் அர்த்தமற்றுப் போகின்றன   சொற்களை தியானிக்க இரண்டு சொற்களுக்கு இடையில் உள்ள ஆகாசத்தைக் காண்கிறேன்   அளவற்றுப் பரந்தது அவ்வெளி   இரவில் சொற்கள் நட்சத்திரமாக மின்னும் காட்சியைப் பார்த்துப் பார்த்து ஏகாந்தத்தில் லயிக்கிறேன்   நான் என்னும் அடையாளம் போய் ஆகாசத்தில் கரைந்தப் பின் சொல் அற…

மத்தகம் – கவிதை

மத்தகம் சில மனிதர்கள் கண்ணாடியாக மாறி விடுகிறார்கள் சந்தோஷத்தில் அப்படியே அவர்கள் முன் நின்று விடுதிறோம் கால பாரமின்றி   அப்படித் தான் எனக்கு அமைந்தான் அவன்   எழுதிக் குவித்த என் ஞானாசிரியன் மூப்பினால் மெத்தையில் சுருண்டுக் கிடந்தான்   மார் நிமிர சாகக் கற்றுக் கொடுத்தவன் எழ முடியாமல் மூச்சிறைக்கும் யானையைப் போல் தோன்றினான்   அக் கடைசி சந்திப்பில் விம்மாமல் விலகினேன்   சில நாட்கள் கழித்து அவன் இறந்த செய்தி கிட்டியது…

உதிரிகள்

சத்தியம் மட்டுமே ஜயிக்கும் ஆசையாக எவனோ எழுதி அழிக்க மறந்த வாக்கியம் சாவிலிருந்து மீண்டவன் முன் அர்த்தங்கள் செத்துப் போகின்றன அவன் புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல் அழாமல் மெல்லியப் புன்னகையுடன் பிரபஞ்சத்தைப் பார்க்கப் பழகுகிறான் உன்னைக் கடந்து அவளை அடைந்தப் பின் நின்னிடம் சொல்ல மறந்தவை யாவும் நினைவில் ததும்புகின்றன அவற்றைக் கேட்க உனக்கும் சரி அவளுக்கும் ஆர்வமில்லை என்னால் சொற்கள் வளர்க்கப்படாமல் தெருவில் அனாதையாக விடப்பட்டன பூமியை முத்தமிடுவதால் பாதங்கள் வணங்கப்படுகின்றன இருட்டில் கண்கள்…

சிங்கவேள் – கவிதை

சிங்கவேள் முடிவற்றது நம் காதல் எனப் பேசித் தீர்த்தவன் ஒரு நாள் சந்திப் பொழுதில் உன்னை மனமாறக் கொன்றேன் சிங்கவேளாய் மடியில் வைத்து நின் இதயம் பிளந்தேன் அடுத்த நாளே யோகத்தில் அமர்ந்து இன்னொரு மனமும் கூட ஒரு பெண்ணும் சிருஷ்டித்தேன் இனி புதியவளின் பஞ்சு பிருஷ்டம் என்னை சீண்டினாலும் தனங்கள் மார்பில் குழைந்தாலும் தொடையில் அமர்ந்து அவள் இட்டம் போல் காலாட்டிக் கொண்டிருக்க யோகத்தில் சிம்மனாய் அமர்வேன் இருட்டு குகையில் தனியே அமர்ந்தப்படி சொல்கிறேன் நித்யம்…

போகி – கவிதை

போகி கந்தல் துணியை உடலில் சுற்றிக் கொண்டு நடந்து போகும் அவர்களை கிராமங்களின் தெருக்கள் காலம் காலமாக அமைதியாக யாருக்கும் சொல்லாமல் தம்முள்ளே அடைக்காத்து வந்துள்ளன மாலை ஒளியுடன் கூட இருள் பரப்பும் பஞ்சனையில் சைக்கிள்களைப் உருட்டியப்படி அமைதியாக இலக்கற்ற அந்த‌ மனிதர்களின் பின் கிராம ஜனம் தொடர்வதை சிறு வயதில் பார்த்த ஞாபகம் அப்படித் தான் பேய் உடல் பூண்ட அந்த சந்நியாசியைப் பார்த்தேன் கிராமத்தின் எல்லையிலுள்ள பாழ் வீட்டின் இடிபாடுகளுக்குள் கோணிப் பையில் உடலை…

சிருங்காரம் – கவிதை

ஒன்றையே நம்புதல் ஒன்றையே தொழுதல் அந்த ஒன்றுக்காகவே வாழ்தலும் சாதலும் எவனுக்கோ சொந்தமான வீட்டில் தோழியாக சில நாள் இருந்து கூடி அவனை உளமாற முத்தமிட்டு பிரிவது இயல்பே என சொல்லிப் பிரிந்து இன்னொருவன் வீட்டில் தெரியாத அவனையும் தெரிந்தது போக தோழியாகக் கூடி முத்தமிட்டு வீடுகள் பலதில் உறங்கியும் அடையாளமற்ற நான் அனைத்தையும் நம்புபவள் பலதின் நியாயங்களை ஏற்பவள் சுருக்கமாக வேசி என்னிடம் அளவுக்கு மீறிய நியாயங்கள் இருப்பதால் மீண்டும் மீண்டும் ஒதுக்கப்படுகிறேன் பெரிய சித்தாந்தி…

சுவர்க்கத்தின் கோடுகள்

வார்த்தைகளே சுவர்க்கத்தின் கோடுகள் பேசி பேசி நரகம் ஆக்கும் வரை பைத்தியக்காரன் நான் நீ இல்லாத நேற்றை மறந்து விட்டேன் புருவங்கள் காது வரை நீண்டு கதைப் பேசும் தனங்களின் பாரம் தாங்காமல் அவள் இடை ஒடியும் கால்களின் கீழ் அமிர்தம் சொட்டும் என அவளுடைய அதி ரூப வர்ணனைகளை சொல்லிக் கொண்டிருந்தேன் கைகளால் என் முதுகைத் தட்டி 'ஹாட்' னு சொல்லலாமே எனத் தட்டையாக முடித்தான் நண்பன் வெளிச்சம் யாவற்றையும் மறைக்க இரவெனும் இருண்டப் பலகையில்…