பாடுவான் நகரம் 

பாடுவான் நகரம் அரங்கமா நகர் விழித்தது. காகங்கள் மொட்டை கோபுரத்தில் அமர்ந்து, விடியலைக் கரைந்தழைத்தன. காவிரி, குடையாக நின்ற தென்னைகளைத் தழுவி நகர்ந்தாள். நகர் காணும் விடியலை வடபத்ரர் இன்றும் ஏற்றார். இரவின் பனி, நகர் முழுதும் ஓர் அங்கதக் குளிரைப் போர்த்தி நின்றது. அம்மா மண்டபம் நுழைந்த வடபத்ரர், சுழித்தோடும் காவிரியைக் கண்டார். காவிரி அவர் அளவில் கோதையே. கண் எட்டும் தொலைவில், நதியின் மடியில் வேளாளர் நட்ட பசும்நெல், நதி மீது வீசும் காற்றால்Continue reading “பாடுவான் நகரம் “