சுவர்க்கத்தின் கோடுகள்

வார்த்தைகளே சுவர்க்கத்தின் கோடுகள் பேசி பேசி நரகம் ஆக்கும் வரை பைத்தியக்காரன் நான் நீ இல்லாத நேற்றை மறந்து விட்டேன் புருவங்கள் காது வரை நீண்டு கதைப் பேசும் தனங்களின் பாரம் தாங்காமல் அவள் இடை ஒடியும் கால்களின் கீழ் அமிர்தம் சொட்டும் என அவளுடைய அதி ரூப வர்ணனைகளை சொல்லிக் கொண்டிருந்தேன் கைகளால் என் முதுகைத் தட்டி 'ஹாட்' னு சொல்லலாமே எனத் தட்டையாக முடித்தான் நண்பன் வெளிச்சம் யாவற்றையும் மறைக்க இரவெனும் இருண்டப் பலகையில்…

அக்னி – கவிதைகள் தொகுப்பு

அக்னியே உன்‌‌ தாகத்திற்கான நீர் நான்   எக்காலத்திலும் யோகத்தில் அமர்ந்தப் பெண்கள் கண்களை மூடியதில்லை சஞ்சலம் பெரும்பாலும் ஆண்களுக்கே   இறப்பை  ஏற்றுக் கொள் என்றான் எளிமையாக நூறு முறை இறந்தவன் போல   நான் மலையின் உச்சியில் அமர்ந்து விடியல்களைப் பார்த்து கொண்டிருக்கிறேன் வண்ணங்களின் அசரீரியைக் கேட்டப்படி   மரங்கள் பறக்க விரும்புவதில்லை மனிதன் மட்டும் விசித்திரன்   அவள் மனதைப் போல மண்ணின் கீழ் இயங்குகின்றன எத்தனையோ ரகசிய உலகங்கள் சப்தமின்றி  …

மூன்றாம் கண் – கவிதை

மூன்றாம் கண் இட பாகம் முழுதும் தந்தும் சிவனை‌ எதிர்‌ நின்று நெற்றியில் முத்தமிடவே ஆசைப்படுகிறாள் உமா நெற்றிக் கண்ணின் சூட்டில் சிவந்த இதழ்கள் பொசுங்கும் வரை -ஆர். கே. ஜி. அந்தரங்கமாக ஆடைகளை அகற்றி சிவனின் கண்களை தன் கைகளால் மூடினாள் அவள் மூன்றாம் கண்ணால் சிவன் விடாமல் பார்க்க செய்வதறியாமல் தவித்தாள் - காளிதாசன், குமார சம்பவம்

சலூன் – கவிதை

சலூன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றால் முடிவெட்டக் கிளம்பி விடுவேன் இப்பொழுதெல்லாம் அடிக்கடி செல்லும் நெருக்கடிக் காலம் வேறு "வெட்ட ஒன்னுமே இல்லையே சார்" நாவிதனும் புலம்பத் தொடங்கிவிட்டான் "வெள்ள முடியாப் பார்த்து பொறுக்கி எடப்பா" பதிலில்லாமல் சமாளித்தேன் சலூனில் கண்கள் எதன் எதன் மீதோ வழுக்கி விழும் அப்படித் தான் அன்றும் "முடிவெட்டவே மத்ராஸ் வரைக்கும் வந்தேன்" தன்னை அறிமுகம் செய்தப் படி நுழைந்தான் ஐம்பதைக் கடந்த அவன் அவன் தலை முடி அடர்த்தியாக வெளி நாட்டுக்காரனின்…

ஏர்ப்போர்ட் குறிப்புகள் – கவிதை

ஏர்ப்போர்ட் குறிப்புகள் எனக்கு ஒரு தனிமைத் தேவைப்படுகிறது என்னிடமிருந்து தூயத்தின் மீது எத்தனைக் காதலோ அழுக்கின் மீதும் அவ்வளவும் நான் விடுதலையாக முதலில் சிறையிடப்பட வேண்டும் கால வெள்ளம் ஒழுகும் குழாயின் நீர்ப்போல சொட்டுகிறது யாருக்கும் பயனின்றி Hello Bye க்கு நடுவில் பேசுவதெல்லாம் மாயா வாதம் எழுத்துக்கள் வண்ணமாக மாறும் காலம் கவிதைகளின் காலம் உட்கார்ந்து விட்டேன் உறங்கவில்லை சந்நியாசியின் கண் சௌந்தர்யத்தை மௌனமாகப் பார்க்கும் பார்த்தப் பின் அப்பட்டமாக்கிவிடும் அந்த லோக யுவதியின் அழகை…

அஹங்காரி – கவிதை

அஹங்காரி என் முன்னே அவள் அமர்ந்தாள் கனமானத் தன் நீலப் புடவையின் தலைப்பை சரி செய்து கண்களை திடமாக என் மீது செலுத்தினாள்   கையில் வெள்ளைப் புத்தகமும் பென்சிலும் எடுத்து “உலகில் ரொம்ப எளிமையான விஷயம் எது ?” வினவினாள்.   “பேசுவது.” சிரித்துக் கொண்டே சொன்னேன்   “அப்போ … பேசுங்க” “எதப் பத்திப் பேச?” “உங்களப் பத்தி சொல்லுங்க.”   அவள் கண்கள் எங்கள் ஊர் குளத்தை ஞாபகப் படுத்த நானும் உற்சாகமாக…

என்னை நம்பிய நிஜங்கள் – கவிதை

இன்றைக்கும் நாளைக்கும் என் சிந்தனை மட்டுமே சரடாய்   சம்மந்தமில்லாத மனிதர்கள் சம்மந்தமில்லாத சித்தாந்தங்கள் சம்மந்தமில்லாத நிகழ்வுகள் ஒரே ஈடாக ஒட்டியோ அல்லது சுத்தமாக எதிலும் ஓட்டாமலோ எவ்வளவு நாள் தான் விதையும் தெரியாமல் பழமும் சுவைக்காமல் வெட்ட வெளியில் மரமாய் நிற்பது   என் வாழ்வைக் கதையாக்கத் தான் இத்தனையும் என் மீதுப் பூசிக் கொள்கிறேனா?   அவர் இதை நம்பினார் அவர் இதை எழுதினார்   உண்மையில் யார் சொல்லி இந்தக் கூத்தை ஆடிக்…

மாய அறை – கவிதை

மாய அறை பிரம்மாண்டமாய் பறந்து விரிந்த மாய அறையில் என் வாழ்க்கை   சுவரில்லா வீட்டில் ஆகாய வேனியாகத் தொங்கும் பளிங்கு ஜன்னல்களின் வழி ஏதேதோ விசித்திரக் காட்சிகளைக் என் கண் கடந்து போகிறது   வெயில் பட்டு சுடு மண்ணில் வேகும் புழுப் போல அறையின் மாயைகளால் நெளிகிறேன் நான்   இந்த கணம் என் நிழல்  கடந்து அறைக்குள் சொந்தம் கொண்டாட ஒன்றும் இல்லை   என் அறை உரிமையாளன் அற்ற வீட்டின் ஒரு…

ஞானத்தின் இருக்கையில் அமர்ந்திருப்பாள் – கவிதை

ஞானத்தின் இருக்கையில் அமர்ந்திருப்பாள் குளிர்த் தாமரைகள் கைகளில் ஏந்தியவளாய் பனிச் சந்திரனின் ஒளி அவள் மேனிப்பட களிப்பினில் தன்னுள் சிரித்துக் கொள்வாள் கரு ரத்ன வண்ணம் அவள் மேனியதாய் உண்டத் தேனின் ஈரத்தில் நா சுழிப்பாள் மாலை ஏகாந்தத்தில் நல் வீணை மீட்டி கண்கள் அரை சோரப் பாட்டிசைப்பாள் மத யானைகள் மனதில் மோதி ஆட பஞ்சுக் கால்களைத் தாமரையில் பொதித்தமர்வாள் அசைவின் நுணுக்கெல்லாம் அழகு தோய்ந்தும் மித பாஷிக் கிளிப் போல் பேச வருவாள் அசுத்தம்…

வள்ளி மணாளன் – கட்டுரை

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் அகம் சார்ந்தப் பாடல்களைத் தன்னுள் கொண்டது . 13 புலவர்களால் பாடப்பட்டது பரிபாடல். தெய்வங்களைக் கருப் பொருளாகக் கொண்ட அகப் பாடல்கள் பரிபாடலில் காணப்படுகின்றன. பாடியவர்: குன்றம் பூதனார் பண்: பாலை யாழ் இரு நிலம் துளங்காமை வட வயின் நிவந்து ஓங்கி அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலைகாக்கும் உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி…