ஒற்றைக்கால் கலி, கவிதை

கலியின் அந்திம காலம் – ஒற்றைக்கால் கலி 4

கலியின் அந்திம காலம் எல்லையிலா கரை மணல் தூசிப் படலம் பனிப் போர்வையாய் கடல் தன் கைகளில் செஞ்சுடர் ஏந்தி ஊழிக் கூத்தாடிக் கொண்டிருந்தது   எதிலும் சம்மந்தமிலாது கரையில் ஒரு கல் இறுக்கமாய் உருண்டு திரண்டு   அருவங்கள் காற்றை நாவாய் கொண்டு தம்முள் பேசிக் கொண்டன ஊழி தொறும் கடல் தன் கைக் கொண்டு இப்படி ஒரு கல்லை சேர்க்கும் என   ஆக்கம், அழிவு எவ்விதப் பிரக்ஞையும் இல்லாமல் கல் குழவிப் போல்… Continue reading கலியின் அந்திம காலம் – ஒற்றைக்கால் கலி 4

ஒற்றைக்கால் கலி, கவிதை

ஒற்றைக் கால் கலி – 3

கலியின் முகம் அலைகள் கரை அடையும் முன் கைகளை மடக்கிக் கொள்வது போல் லஜ்ஜை ஹாஸ்யம் ரௌத்திரம் கனிவு உணர்ச்சிகள் பாதை தொலைத்த வழிப்போக்கர்களாக ஊர் முற்றத்தில் சுதை ஆனையாய், மீசை சாமியாய் ஆங்காங்கே நிற்கின்றனர் நுழையவும் முடியாமல் ஊரைக் கடக்கவும் முடியாமல்.   கலி என் தந்தை அவன் சாயலில் நான்.   “அந்த காலத்தில் அப்படி இல்லை எல்லாம் கலியின் ஆட்டம்” இச் சொற்களைக் கேட்டாலே அளவிலா கோபமும், இயலாமையும், வெறுமையும் என்னை அறியாமல் என்னுள் புகும்.… Continue reading ஒற்றைக் கால் கலி – 3

கவிதை

ஒற்றைக் கால் கலி – 2

ஒற்றைக் கால் கலி - 2 கலியோடு உடன்பட்டு விட்டான் தர்மன் முன்பு போல் தூற்றலோ பெருமூச்சுகளோ இல்லை   தர்மனால் கலியோடு இன்று சாவகாசமாக அமர முடியும் அதன் தோள்களில் படிந்தமண்ணைத் தன் கைகள் கொண்டு தட்டி விட முடியும்   ஏதோ விரக்தியில் தன் மேல் கோபம் கொண்ட நண்பன் போலவே தர்மன் பதற்றமின்றி கலியைக் காண்கிறான்   கலி அமரும் இடங்களோ விசித்திரமானது எக்ஸ்பிரஸ் நில்லாத இரயில் நிலைய பிளாட்பாரம் அதன் கடைக்… Continue reading ஒற்றைக் கால் கலி – 2

இசை

ஹார்மனி – ஏ.ஆர். ரஹ்மான்

இன்றைய நவீன ரசிகன், கலைகளுக்கு நோக்கங்களை திணித்து விடுகிறான். எழுத்தை எடுத்து கொண்டால், நிகழ் காலத்தை, யதார்த்தத்தைத் துல்லியமாக எழுதியே ஆக வேண்டும். அரசியல் பேசியே ஆக வேண்டும். இசையென்றால், சிறு வட்டம் கடந்து, அனைவருக்கும் போய் சேர வேண்டும். மொழியைக் கடக்க வேண்டும். இப்படி அடுக்கடுக்கான சோஷியலிஸ சித்தாந்தங்கள். நம் சமூகம், சித்தாந்தங்கள் பேசி, ‘கருத்து’ என்ற அளவில் நுண் உணர்வை தொலைத்து, பெரும்பாலும் நம்பிக்கையற்ற ஊக்கமற்ற சமூதாயமாக எதிலும் தொடர்பில்லாததாக  இயங்கி வருகிறது.   மந்தமாக எங்கெங்கோ வாசகங்களைப் பொறுக்கி, … Continue reading ஹார்மனி – ஏ.ஆர். ரஹ்மான்

கவிதை

கவி யானை – மனுஷ்யபுத்திரன்

"மனுஷ்யபுத்திரனின் கவிதையை வாசிப்பது எளிதானதில்லை. சொற்கள் கையில் எடுக்கமுடியாத பாதரசம் போல ஒடுகின்றன. மீறி கையில் ஏந்திவிட்டால் அதன் கனம் தாள முடியாததாகிவிடுகிறது."        - எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர். சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைப்பெற்று வரும் புத்தக கண்காட்சிக்கு நேற்று சென்றிருந்தேன். நூல் பதிப்பகத்தார் நடத்துவது. சாரு நிவேதிதா தினமும் எழுதி வருவது போல, தாவரங்கள், பறவைகள் என இயற்கையின் மிச்ச சிருஷ்டிகளை ஆவலோடு நெருங்கத் தொடங்கியுள்ளேன். விதி விலக்காக, நாய்களை மட்டும்… Continue reading கவி யானை – மனுஷ்யபுத்திரன்

கவிதை

ஒற்றைக் கால் கலி – 1

இருளில் கால் துண்டித்த ஒற்றைக் கால் பசுவாக அனாதையாய் கண்ணில் நீர் சுர நிற்கிறான் தர்மன்   தெறித்த இரத்தத் துளிகள் இருளில் மின்னும் தாரைப் போல அவன் சுற்றிய திக்கெங்கும் சாட்சியாய்   தர்மனும் சாதாரணன் தான் ஏனோ, நாம் அனாயாசமாய்க் கடந்த சொற்களை ஆப்தமாய், தியானித்து பிதற்றியிருப்பான்   பெரும்பாலும் அர்த்தமற்ற வாழ்ந்தொடிந்தோர்களின் தத்துவங்களை மறு வாழ்வு தந்தே தீருவேன் என உச்சிக் கொம்பில் நின்றிருப்பான்   ஏதோ ஒரு பொழுதில் அறத்தின் தேவையை… Continue reading ஒற்றைக் கால் கலி – 1

நாவல்

ஏறிய பித்தினோடு…

அர்ஜுனின் பூர்விகம் திருபெரும்புதூர். தந்தை அனிருத்தனுடன், பெரும்புதூரில் உள்ள தன் தாத்தன் வீட்டிற்கு ஆதிரை நட்சத்திரம் தோறும், மாதம் ஒரு முறையாவது சென்று வருவது வழக்கம். ஆதிரை ராமானுஜரின் திருநட்சத்திரம். பெரும்புதூரில் பட்சி தாத்தா மிகப் பிரசித்தம். கோவிலடி மேற்கு வீதியில் வீடு. தேசிகர் பிரபந்தங்கள், வைகானசம், ஶ்ரீபாஷ்யம் என கரை கண்டவர். தினம் பன்னிரு நாமங்களை மேனியில் இட்டு, பெருமானே தமக்கு காப்பு என வாழ்பவர். அர்ஜுனுக்கு பட்சி தாத்தா பேருக்கு ஏற்றார் போல் கருடானாகத்… Continue reading ஏறிய பித்தினோடு…