அப்புறம்?
முதல்ல நீங்க புதுமைப்பித்தன் ல ஆரம்பிக்கலாம்
எல்லாருக்கும் அதான் பிள்ளையார் சுழி
மணிக்கொடி காலம் வேற
அப்புறம்?
சி. சு. செல்லப்பா, க. நா. சு. வகையறா
க. நா. சு. தானே கோடு போட்டு இலக்கியத்த நமக்கு காமிச்சாரு
அப்புறம்?
தி. ஜானகிராமன், லா. சா. ரா., வகையறா
கொஞ்சம் பார்ப்பன வாட வீசும். பட், ஓகே.
காவேரி ல முக்கி எழுந்த உணர்வு
அப்புறம்?
அசோகமித்திரன் தான்
அவரப் படிக்கும் பொழுதே
ஜி. நாகராஜன், நீல பத்மநாபன்
தொட்டுக்கலாம்
அப்புறம்?
கி. ராஜநாராயணன், கு. அழகிரிசாமி
நேட்டிவிட்டிக்கு
அப்புறம்?
பின் நவீனத்துவம் வந்துடும்
ஜெயமோகன், சாரு, எஸ். ரா மாதிரி
அப்புறம்?
பிரபஞ்சன், நீல பத்மநாபன் வேற
இவங்கள எதுல சேர்க்க?!
அப்புறம்?
ஒரு லிஸ்ட் தயார் ஆகுது
நூறு புத்தகங்கள் வரைக்கும் வரலாம்
சரியா சொல்லத் தெரியல
அப்புறம்?
தொகுத்தல், பகடி, குறியீடு, படிமம், அங்கதம், மரபு மீட்சி
அதான் பின் நவீனத்துவம்
அப்புறம்?
யோவ்! என்ன அப்புறம்?
அதான் பின்னுக்கு எப்பையோ போயாச்சே!
அப்புறம்?
– ஆர். கே. ஜி.
அப்பறம் சுந்தர ராமசாமி தி. ஜ. கு. ப.ரா. லா ச ரா. ஜெயகாந்தன் ….
LikeLiked by 1 person