Moon River

Moon River

85 Best Moon River images in 2020 | Moon river, Beautiful moon ...

நதியால்
நிலவைக்
கடலிடம்
சேர்க்க முடியவில்லை

தன் போக்கைத்
திருப்பி
ஆறுதல் சொல்லவும்
வழியில்லை

எல்லாம் அறிந்த நிலவு
தன்னை விட்டு
கடந்து போகும் நதியை
மன்னித்து சிரித்தது

நதியில்
தன் ஒளி – நிழல் விழும்
அந்த ஒரு இடத்தில்
நீரைக்
கொத்திக் கொத்தி
கணங்களை
பெரு யுகமாக்கி
சில நேரம்
வாழ்வாங்கு வாழ்ந்தது

பொழுது புலர
நிதானமாக
மரணிக்கும் நிலவு
வானின் எதிர் திசையில்
தன்
அஸ்தமனத்திற்காக காத்திருந்தது

அக்கணம்

இனம் புரியாத
ஓர் வெண் நிறப் பறவை
தூதாக
நதியிலிருந்து
நிலவை நோக்கிப் பறந்தது

நதிக்கும்
நிலவுக்கும் அப்பால்
அதன் பிரயாணம் தொடர்ந்தது

ஆர். கே. ஜி 

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: