பாரிஸின் மழை

பாரிஸின் மழை

Amazon.com: Watch Midnight in Paris | Prime Video

நகரங்களைக் காதலிக்கத் தெரியாமல், நகர வாசிகள் என்றாலே அன்பற்றவர்கள், சுயநல வாதிகள் போன்ற எளிமையானக் கருத்துகளுடன், பேத்தல்களுடன் ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்தக் கீழ்த்தனமானப் புரிதலுடன், நகரங்களில் பணம் ஒன்றிற்காக மட்டுமே அரை மனதுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது இக்கூட்டம்.

இதன் மாற்றுக் கருத்தாக Woody Allen இயக்கிய “Midnight in Paris” (2011 வெளியானது) என்னும் படத்தை சொல்லலாம். 1920களின் பாரிஸைப் பலக் கோணங்களில் முன் வைக்கிறது . நகரம் ஒன்றை அப்பட்டமாகக் கொண்டாடும் படம்.

கதாநாயகன் கில் (Gil) இளம் நாவல் எழுத்தாளன். பாரிசுக்குக் காதலியுடன் வருகிறான். ஒரு நாள் நள்ளிரவுக் கொண்டாட்டங்களுக்குப் பின், பாரிஸ் தெருக்குகளில் நடக்கும் பொழுது, பழைய Vintage கார் ஒன்று அவனை அழைத்துச் சென்று, Jean Cocteau, Scott Fitzgerald போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்கள் பங்குப் பெரும் கிளப் பார்ட்டியில் விடுகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் அந்தக் கார் மூலமாக, பாரிஸின் 1920 உலகிற்குள் Gil தானும் ஒருவனாக நுழைகிறான்.

கற்பனையானத் திரைக்கதை தான் என்றாலும், பாரிஸின் ஆளுமைகளைப் படத்தில் கதாப்பாத்திரமாக வடிவமைத்துள்ளனர்.

Jean Cocteau ; Gertrude Stein

Man Ray ; Pablo Picasso

Henri Matisse ; Cole Porter

இவர்கள் போக, பாரிஸின் பிரம்மாண்ட சிற்பங்களை செத்துக்கிய Frédéric-Auguste Bartholdi போன்ற சிற்பிகளின் குறிப்பும் படத்தில் காண முடிகிறது. பாரிஸ் இத்தனை வசீகரமானமொரு நகரமாக உருவாவதற்கு, பல்வேறு மனிதர்களின் உழைப்பும், குறிப்பாகக் கலைஞர்கள் நகரத்தின் மீதுக் கொன்டக் காதலேக் கருவியாக இருந்துள்ளது.

The Dance by Henri Matisse
The Dance by Henri Mattise

1920 களின் பாரிஸ் இலக்கியம், தத்துவம், ஓவியம் எனப் பல முனைகளில் மனித சாத்தியங்களை நகர்த்தியுள்ளது. பணம், சுய நலம் என்றத் தட்டையான இலக்கணம் கடந்து, நகரம் குறித்த எந்த விழுமியங்களையும் யோசிக்க முடியாத நம் கூட்டத்திற்கு அன்னியமாய் இவைத் தோன்றலாம் .

Woody Allen ஒரு நேர்காணலில், லண்டன், பார்சிலோனா, பாரிஸ் போன்ற நகரங்கள் ஒவ்வொரு முறையும் வாழ்வுக் குறித்த ஒரு புதியக் கண்ணோட்டத்தைத் தருவதாக குறிப்பிடுகிறார்.

நகரங்களைக் காதலிப்பதற்கு அந்நகரங்கள் குறித்த நேரடியான வரலாற்று நூல்கள், இலக்கியங்கள், நாடகங்கள், சினிமாக்கள் ஊடகமாக அமைகின்றன. சென்னையைப் பொருத்த அளவில், எஸ். முத்தையாவின் வரலாற்று நூல்கள், எஸ். ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலைக் குறிப்பிடலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் ஸ்ரீதர் தொடங்கி, பா. ரஞ்சித்தின் “மெட்ராஸ்” வரை இது தொடர்ந்திருக்கிறது.

தமிழில் பாரிஸ் குறித்த இரண்டு நூல்கள் முக்கியமானவை. ஒன்று, ஜெயகாந்தனின் நாவல் “பாரிசுக்குப் போ”, ஆங்கிலத்தில் “Go back to Paris”. இந்நாவலில் பாரிஸின் நேரடியானச் சித்திரங்கள் இல்லையென்றாலும், பாரிஸிலிருந்து கனவுகளுடன் வரும் சாரங்கன், தமிழ் இசைச் சூழலின் நெருக்கடிகளில் நொந்து, பாரிசுக்குத் திரும்பும் கதையை ஜெ இந்நாவலில் சொல்கிறார்.

Go Back to Paris (Parisukku Po)

MEDUSAVIN MADHUKOPPAI: Buy ?????????? ??????????? /MEDUSAVIN ...

இரண்டாவது, சாரு நிவேதிதாவின் ” மெதூஸாவின் மதுக்கோப்பை” என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல். பிரெஞ்சு சமுதாயத்தின் சித்தரிப்புப் போக, தன் எழுத்திற்கு ஊக்கமாக இருந்தப் பல பிரெஞ்சு எழுத்தாளர்கள் / முன்னோடிகள் குறித்து இந்நூலில் சாருப் பேசுகிறார். பிரெஞ்சு உலகிற்குத் திறவுகோலாக இருப்பதால், மிகத் தீவிர வாசிப்பிற்கு ஆழ்த்தக் கூடிய நூல் இது .

சென்னை வாசிகள் அரை மனதுடன் நகரை அணுகுவதால் தான், வாசகக் கூட்டங்கள் ஐந்து நபர்கள் கடந்து நடப்பதில்லை. சென்னையின் மத்திய நூலகம் கவனிப்பாரின்றி அனாதையாகக் கிடக்கிறது. நல்லப் புத்தகக் கடைகள் இல்லை.

நேர் எதிராக நகரின் ஒரு அம்சமான உணவு, எல்லாத் தொழில் நுட்பங்களுடன் செழிப்பாக நடந்து கொண்டிருக்கிறது. என் அனுபவத்திலேயே சென்னைக் கபேக்களின் தரநிலைக் குறைவில்லாமல் இருப்பதாகவே உணர்கிறேன்.

உணவகம், கபே, பப் இவற்றைக் கடந்து, சென்னை நகரம் சிந்தனைகளுடன் தீவிரமாக இயங்காமல், மந்தமாக இயங்கிக் கொண்டிருப்பதாகவேத் தோன்றுகிறது. நான் சொல்லும் சிந்தனையில், தீவிரமான இன, மொழி, மத வாதம் இல்லை.

Midnight in Paris படத்தில் வரும் ஒரு உரையாடல்.

Adriana: I can never decide whether Paris is more beautiful by day or by night.

Gil: No, you can’t, you couldn’t pick one. I mean I can give you a checkmate argument for each side.

You know, I sometimes think, how is anyone ever gonna come up with a book, or a painting, or a symphony, or a sculpture that can compete with a great city. You can’t. Because you look around and every street, every boulevard, is its own special art form and when you think that in the cold, violent, meaningless universe that Paris exists, these lights, I mean come on, there’s nothing happening on Jupiter or Neptune, but from way out in space you can see these lights, the cafés, people drinking and singing.

For all we know, Paris is the hottest spot in the universe.

படம் முழுவதும் பாரிஸின் மழைக் குறித்து Gil சிலாகித்துக் கொண்டே இருக்கிறான். அமெரிக்கா விட்டுப் பாரிஸில் தங்கிவிடுவதாக, Gil முடிவும் செய்கிறான்.

ஆர். கே. ஜி.

midnight in paris (hemingway) discovered by ℓaura

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

One thought on “பாரிஸின் மழை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: