இரவு என்னும் கரும் மழை – கவிதை

இரவு என்னும் கரும் மழை

Image result for dark night sky

அழகான மாலைகளைப்
பார்க்கும் பொழுது
பயமாக இருக்கிறது எனக்கு

எத்தனையோ முறை
அவளுடன்
பேசிப் பேசி
இரவுகளைக்
கட்டிப் போட்ட ஞாபகம்

பெரிய சித்தாந்தங்களை பேசும் பொழுது
சலனமின்றிக்
கன்னத்தில் கை வைத்து
கேட்டுக் கொண்டிருப்பாள்

அவ்வப் பொழுது பேசுவது பிடித்தால்
நெற்றியில் முத்தமிடுவாள்

எனக்குத் தெரியும்
நான் பேசும் சொற்கள்
அவள் உலகம் சார்ந்தவை அல்ல..
இருந்தும்
பேசிக் கொண்டே இருப்பேன்

அக்காலங்களில்
மாலை சூரியன்
வானில் ஒட்டி வைத்தது போல்
நகராமல் நிற்பான்

நான் பேசுவதை
கேட்டுக் கொண்டிருந்தவள்
ஒரு நாள்
மௌனமாக என்னை விட்டு
நகரத் தொடங்கினாள்

நானும் கோபப்படாமல்
அவளை அவள் உலகத்தில் விட்டு
திரும்பி விட்டேன்

இப்பொழுதெல்லாம்
மாலையில்
வீட்டின் மாடியில் நின்றபடி
தனியாக
சூரிய அஸ்தமனங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

காற்று நினைவுகளை

மகரந்தம் என்று புரிந்து கொள்ளாமல்
தூசியெனத் தட்டி விடுகிறது

உண்மையில்
தனிமை
என்னை நூறாகக் கிழித்து
அந்தி சூரியன் முன்
படையலாகப் போட

இத்தனை நாள் தவிர்த்த
இரவு எனும் கரும் மழை
துளித் துளியாகத் தூறி
எனை முழுதாய் நனைக்கிறது

ஆர். கே. ஜி.

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: