புத்தர்கள் நடப்பதில்லை – கவிதை

புத்தர்கள் நடப்பதில்லை

Dhammapada_150n.jpg

கீழே
எறும்பு உருட்டும்
சீனிக்கட்டியாக
நகரம் அவன் முன்
வளர்ந்துக் கொண்டே போனது

நகரத்தின்
எந்த இயக்க விதிகளுக்கும்
ஒட்டாத அவன் மனம்
நகரத்துக்கு வெகுத் தொலைவிலுள்ள
இக் குன்றைத் தேர்வுச் செய்தது

குன்றை அடையும் முன்
நகரத்திடம்
சிலக் கேள்விகளைக் கேட்டான்
ஊமைக்கொட்டான் போல நகரம் முழிக்கத்
தானே விடைகளைத் தேட முனைந்தான்

அவனிடம்
யார் யாரோ
இன மொழி தேசிய வாதங்களை
அவரவர்க்கு உகந்தப்படி
திணித்தார்கள்
அல்லது
துறக்கச் சொன்னார்கள்

சில நேரம்
டி.வி.யின் முன்
அமர்ந்துக் கொண்டு
விவாத நேரங்களின்
கூச்சலோடு
கத்துவான்
பொங்கி முடித்து அமைதியாவான்

மூன்றாண்டுகளாக
நிதி அறிக்கைகள்
போரின் திட்ட‌வரைப்படம்
எண்ணை விலை ஏற்றம்
பிளாஸ்டிக் உபயோகம்
இரயில் பட் ஜெட்
நதிகள் இணைப்பு
என அனைத்தின் மீதும்
விமர்சனமோ
கருத்தோ
அல்லது
எதிர்வினையோ
அவனிடம் இருந்தது

ஒரு நாள்
வீட்டில் யாருமிலா சமயத்தில்
கத்தியைப்
பான்டில் சொருகிக் கொண்டு புறப்பட்டான்

தெருவில் இறங்கி
யோசித்தால்
கொல்வதற்கு பத்துப் பேராவது இருந்தனர்

நெருக்கமான எதிரியைத் தேர்வுச் செய்தான்
கொன்று முடித்தக் கையுடன்
மாலையில்
குன்றை
ஏறத் தொடங்கினான்

மழை மேகம்
குன்றின் முடியில்
தகப்பனின் தோளில் அமர்ந்தக்
குழந்தையைப் போல
விளையாடிக் கொண்டிருந்தது

கீழே
ஓடும்
இரயில் தண்டவாளங்கள்
குன்றை
நகருடன்‌ இணைக்கும்
கயிறாக இருந்தன

இரவாகி
இருள் படிய
அவன்
கத்தியால் பின்னிருந்து சொருகப்பட்டு
உடல் இருப்பிளவாகி
இரத்தத் தர்ப்பணமாக
வார்க்கப்பட்டான்

காலை விடியலில்
செத்தவனின் கண்கள்
கரும் பாறை ஒன்றில்
அங்குமிங்கும்
உருண்டுக் கொண்டிருப்பது
தெரிந்தது

காற்றடங்கி
அவை ஒரு நிலைக்கு வர
நகரைக் கோபத்துடன் பார்ப்பதுப் போல்
தோன்றியது

இதனால் தான் என்னவோ
புத்தர்கள்
நகரங்களில் நடப்பதேயில்லை

குன்றுகளில்
நிசப்த வெளிகளைப் பார்த்தப்படி
அமர்ந்து விடுகிறார்கள்
மௌனமாக

எல்லாக் கூச்சலுக்கும் அப்பால்
குன்றின் பின் புறம்
இறக்கமற்ற
நிசப்தம்
மொத்த வெளியையும்
விழுங்கிக் கொண்டிருந்தது

அனாயாசமாக
ஒரு‌ மாயப் பறவை மட்டும்
காற்றற்ற அவ்வெளியைத்
தன் மென் இறகுகளால்
கீறிக் கொண்டுப் பறந்தது

– ஆர். கே. ஜி 

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: