அசைவுகளின் சப்தம்

f9c6abc3906e9da2c81076917528c4a0
ஓவியர்: கேஷவ்

ஸ்தாவரம், ஜங்கமம் வீர சைவத்தின் இரு அங்கங்கள்.

ஸ்தாவர மரபில், அசைவற்றவன் சிவன். கோவில்களும், லிங்கங்களும் அசைவற்ற சிவனின் உருவகங்கள். 

இதற்கு எதிர் முனையானது ஜங்கமம். சிவனின் அசைவைப் புகழ்வது. எதையும் அவன் அசைவாகப்  பார்க்கக் கூடியது. 

சைவ நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரும், ஜங்கமர் மரபைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.கி. இராமானுஜத்தின் (A.K. Ramanujan’s ‘Speaking of Siva’) தொகுதியிலிருந்து கவித்துவமான சில பாடல்களை மொழி பெயர்த்துள்ளேன். ஜங்கமரான, கன்னட வசனக் கவி மரபை சேர்ந்த பசவண்ணரின் பாடல்கள் இவை. 

SOS.jpg

* The rich will make temples for Śiva.

What shall I, a poor man do?

My legs are pillars, the body the shrine,

the head a cupola of gold.

Listen, O lord of the meeting rivers,

things standing shall fall,

but the moving ever shall stay.

 

செல்வந்தர்கள் பெரும் கோவில் எழுப்ப

ஏழை அடியேன் என் செய்ய வல்லேன்?

கால்கள் தூண்களாக

உடம்பு கோவிலாக

என் சிரம் தங்கக் கூரையாகட்டும்

கேளாய், சங்க நாயகா

நிற்பன நிச்சயம் வீழும்

நகர்வன நிற்கும்  

முடிவிலியாய்

 

* When a whore with a child

takes on a customer for money,

neither child nor lecher

will get enough of her.

She’ll go pat the child once,

then go lie with the man once,

neither here nor there.

Love of money is relentless,

my lord of the meeting rivers.

 

குழந்தை உடன் வந்த 

விலைவேசி 

காமுகனைக் கூடுவாள் எனில்

குழந்தையும் அவள் முழுமையைக் கொள்ளாது

காமுகனும் அவள் முழுமையக் கொள்ளான்

குழந்தையை ஒரு கணம் தட்டி

காமுகனை ஒரு கணம் சீண்டி

இங்குமின்றி

அங்குமின்றி

பதைபதைப்பாள்

சங்க நாயகா

இரக்கமற்றது 

முடிவற்றது

அன்றோ

இப் பொருள் தேடல்

 

* They plunge wherever they see water

They circumambulate every tree they see

How can they know you O Lord

who adore waters that run dry trees that wither?

 

காணும் நீரெல்லாம் மூழ்குவர்

பார்க்கும் மரமெல்லாம் சுற்றுவர்

அறிவரோ இவர்

ஓடும் நீரையும் 

காய்ந்து உதிரும் மரங்களையும்

விரும்பும் 

உன்னை

 

அசைபவர் ஜங்கமர்

எனில்

அசைத்தவன் சிவன்!

– ஆர். கே. ஜி.   

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: