ஓலையில் வேய்ந்த சொற்கள்

எழுத்தை அனுகுவதில் இரு பிரிவு உண்டு.

களம், கதை, நடை என புற சித்தரிப்புகளில் ஆழ்ந்து களிப்பது ஒன்று. புறம் சார்ந்த வாசிப்பு நிச்சயம் ஒதுக்கக் கூடியதல்ல. ஆனால் புறம் எழுத்தாளன் வாசகனை படைப்பில் ஆழச் செய்யும் கருவி மட்டுமே. ‘காண்பித்தல்’ எனும் அளவில் புறத்தைக் கொள்ளலாம்.

இப்படி எடுத்து கொள்ளலாம். தட்டையான நடையும், சோர்வான மாந்தர்களும் கொண்ட மெய் தரிசனம் காட்டும் நாவல்களை,  சிறுகதையை நம்மிடம் தந்தால் (பேஜ் டர்னர் அல்லாத) எத்தனை பேர் படிக்கக் கூடும்? விமர்சிக்கும் அளவிற்கு நம்மால் இப்படைப்புகளுக்கு உரிய நுண் வாசிப்பைத் தர முடியுமா?

இவற்றை நெருங்கத் தடையாக இருப்பதற்குக் காரணம், எழுத்தாளன் காண்பிக்கும் புறத்தோடு நின்றுவிட்டோம். ‘காண்பித்தல்’ என்ற அளவை கடந்து ‘கண்டடைதல்’ என்ற நிலையிலேயே  எக்காலத்திலும் நுண் வாசிப்பு, படைப்பு நிகழ்ந்துள்ளது. ‘கண்டடைதல்’ மூலமாக ஓர் தரிசனத்தை அடைந்து, தரிசனம் தத்துவமாய் கனியும் பொழுது, ஆழ் வாசிப்பும் படைப்பும் சாத்தியமாகிறது.

இன்றைய தமிழ் இலக்கியம் முக்கால் பங்கு, ஜெயமோகன் என்னும் ஆளுமையின் சொற்களை, படைப்புகளை, வாதங்களை ஏற்றோ அல்லது எதிர்த்தோ நிகழ்வதே. இத்தகு ஒற்றை ஞானக் குரல்கள் தமிழுக்கு புதிதல்ல. பாரதி தொடங்கி, ஜெயகாந்தன் வழி இன்று ஜெயமோகன். நான் கண்ட வரை இத்தகு குரல்கள் நான்கு விழுமியங்களால் மெய்ப்படுகின்றன. 1. இந்திய இறையான்மை குறித்த புரிதல் 2. தத்தவம் நோக்கிய பார்வை 3. பிராந்திய பண்பாட்டில் ஆளுமை 4. செவ்வியல் ஆக்கங்களின் தாக்கம்

‘ஓலைச் சிலுவை’ சிறுகதை ஜெ எழுத்தின் பரிணாமத்தை சொல்லக் கூடிய ஒன்று.

DSC_0065.jpg

ஜெயமோகனின் ஆதாரங்களில் இருவர் ஆ. மாதவன், நீல பத்மநாபன் என்று திடமாக சொல்லலாம். சுந்தர ராமாசியிடம் நெருங்கின தொடர்பிருந்தாலும், அவர் எழுத்தின் வழி பெரிய பாதிப்பு ஜெ விடம் இல்லாமலிருப்பது சற்று வியப்பாகவே உள்ளது. சாதாரணத்துவமும், வட்டாரமும் பூசி எழுதும் ஜெயமோகன், மேற் சொன்ன இரு ஆளுமைகளின் தத்துவ நீட்சி என்றால் மிகையல்ல.

ரொட்டி குடுங்க சாயிப்பே…’ என்றேன். ரொட்டி மட்டும் போருமா?என்று அவர் சிரித்துக்கொண்டே கேட்டார்.’ ’நெறைய ரொட்டி வேணும்எனக்க வீட்டுக்கு குடுக்கணும் சாயிப்பே. எனக்க தங்கச்சிக்கு ரொட்டி வேணும் சாயிப்பே

சாகிப் என்னை மெல்ல இழுத்து அணைத்துக்கொண்டார். அவரது வாசனை என்னை சூழ கண்ணீர் விட்டுக்கொண்டு அவர் உடையில் என் முகத்தை புதைத்தேன். என் மூச்சு உள்ளிருந்து விம்மல் விம்மலாக வெடித்து வந்தது.என் அப்பாவின் வியர்வை நெடி ஊறிப்போன பனைமட்டையும் குளத்துப் பாசியும் உப்பும் கலந்தது. சாகிப்பின் வியர்வை நெடியில் ஒரு மெல்லிய வெடிமருந்து வீச்சம் இருந்தது. அன்று முதல் அதன்மேல் எனக்கு ஒரு மோகம் உருவாகியது.

ஜெயமோகன் சிறு கதைகளில் நாம் பெரிதும் பேசாத ஆளுமைகளின் சித்திரங்களைப்  படைக்கிறார். ஓலைச் சிலுவையில் வரும் டாக்டர் / சாயிப் என்னும் தியடோர் சாமர்வெல் உண்மையில் நம் நாட்டில் வாழ்ந்தவர். இங்கிலாந்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர், இந்தியாவிற்கு குடி பெயர்ந்து வேலூர் சி.எம்.சி.யிலும், கேரளாவில் குந்தாவிலும் மருத்துவம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டவர்.  மலை ஏற்றங்களில் ஆர்வம் உடையவர். ரஸ்கின் பாண்ட், லாரி பேக்கர் என இந்திய நாட்டின் இயக்கத்தோடு தோய்ந்த நீண்ட மரபே உள்ளது.

கதையில் வரும் ஊர் சிறுவன் நெய்யூர் ஆஸ்பத்தரியில் சாமர்வேல் என்னும் மருத்துவரை கண்டடைகிறான். கண் முன் தகப்பன் இறக்க, ஆசானாக, தகப்பனாக சாமர்வேல் மாறுகிறார்.

அம்மா மெல்ல கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தாள். செரி, அதாக்கும் விதிண்ணா அப்பிடி நடக்கட்டு. செத்தா இங்க வல்ல எடத்திலயும் குழிச்சு போடுங்க சாயிப்பே. வல்ல தெங்குக்கோ வாழைக்கோ உரமா போவட்டும். சீவிச்சநாளு முழுக்க மனசறிஞ்சு ஒரு வாயி கஞ்சி குடிச்சாத மனுஷனாக்குமே கிட்டினதெல்லாம் பிள்ளைகளுக்கு பிள்ளைகளுக்குண்ணு கொண்டு வந்து குடுத்தவனாக்குமே இனி அவனுக்க ரெத்தமும் சதையும் எல்லாம் வேரு உறிஞ்சி தின்னட்டு….அவள் தொண்டை அடைத்தது அவனை தின்னு வளாந்துவாற மரமெல்லாம் நல்லா காய்க்கும் சாயிப்பேஉதடுகளை கடித்துக்கொண்டு தன்னை அடக்கியபடி கையெடுத்து கும்பிட்டு அம்மா கிளம்பினாள்.

சராசரியரோடு ஒன்றாக செல்லும் இந்த சிறுகதையில், தத்துவ சீண்டல்கள், கவித்துவம்  கதையோடு இயல்பாகக் கோர்க்கப்பட்டுள்ளன.

இசை சிலசமயம்தான் தூய உணர்ச்சி மட்டுமாக ஆகும். வெறும் ஆன்மா மட்டுமாக காற்றில் நிற்கும். அந்த கல்வியறிவற்ற அரைநிர்வாணக்கிழவரும் நானும் எங்களையும் இந்த மானுடத்தையும் ஒட்டுமொத்தமாக பிணைத்திருக்கும் தூய்மையான ஒன்றால் கட்டுண்டு உடல் நீரெல்லாம் கண்ணீராக வழிய அங்கே அமர்ந்திருந்தோம்.

கண்ணன், துரியோதனன், தர்மன், பீஷ்மன் என வெண்முரசில் பகடையாடும் ஜெ. வின் இன்னொரு களம். இத்தனை விஸ்தாராமாக, பல தளங்களில் எழுதிய தமிழ் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அவர் ஒரு ஓலைச்சிலுவையை என்னை நோக்கி நீட்டினார். காய்ந்த ஓலைச்சிலுவை. பிள்ளைகள் விளையாடுவதற்காகச் செய்து வீசியது. அவரது புன்னகையைக் கண்டு பரவசத்துடன் நான் செயலிழந்து நின்றேன். இது உனக்காகஎன்று அவர் சொன்னார். தேவாலய வாத்தியத்தின் இசையே குரலானது போல. நான் அதை வாங்குவதற்காக கைநீட்டி சென்றதும் கால்தள்ளாடி முன்னால் விழுந்தேன். அந்த ஓலைச்சிலுவையும் கீழே விழுந்தது. மண்ணில் இருந்து அதை பொறுக்கிக்கொண்டு நிமிர்ந்தேன். என் முன் அவர் இல்லை, ஆனால் அவர் இருந்ததன் மெல்லிய ஒளி மிச்சமிருந்தது

 அப்போதுதான் நான் கண்டதென்ன என்று உணர்ந்தேன். அந்த ஓலைச்சிலுவையை என் நெற்றிமேல் சேர்த்து மாறிமாறி முட்டிக்கொண்டு,கண்ணீர் மர்பில் கொட்ட, உடம்பின் அத்தனை மயிர்க்கால்களும் சிலிர்த்து எழுந்து நிற்க, தரையில் மண்டியிட்டு என் உடலே வெடிக்கும் வேகத்துடன் எனக்குள் கூவினேன். என் தேவனே! என் ஏசுவே ! என் மீட்பனே! என் ஐயா, இதோ உனக்கு நான்! உனக்கு நான் என் தேவனே

இறைவன் ஜோடனையற்றப் பல ஓலைச் சிலுவைகளை நமக்குத் தந்துள்ளார். அச்சிலுவைகளை நாம் விளையாட்டாக பாரமின்றி சுமக்கலாம். துன்ப காலங்களில் தேவனின் கால்களில் வெட்கமின்றி விழலாம்.

மத மாற்றங்கள் குறித்த கருத்துக்கள் ஆயிரம் இருந்தாலும், உண்மையில் ஏழ்மைக்கு, ஓலைக் கூரைகள் வழி விழும் வெளிச்சம் வானில் நிற்கும் தேவனின் ஆசிர்வாதமே. நோய், வறுமை என அனாதையாய் நின்ற காலங்களில் சாமர்வேல் போன்ற மனிதர் ஏசுக்களே.

தூரத்தில் சாமர்வெல் சென்றுகொண்டிருந்தார், எனக்கு வெகுதூரம் முன்னால்…”

ஆகஸ்ட் 11 அன்று விகடகவி இணைய இதழில் வெளியானது.

– ஆர்.கே.ஜி.

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: