கட்டுரை, வரலாறு

கோனிசமும் கேப்பிடலிஸமும் – அற டாக்கீஸ்

அகம்: வரலாறு ஏன் இத்தனை அந்நியமாய் தெரிய வேண்டும்?

வரலாறு அன்னியமாக முதல் எதிரி நாமே. நாமாக ஏதோ நடுநிலையாக இருந்தால் தான், உலகம் சுபிட்சம் அடையுமென்னும் பாவனையோடு வரலாற்றை நெருங்குகிறோம்.

நாம் என்ன அத்தனை நல்லவர்களா … ஒரு நிமிஷம்.

அகத்தை இரண்டு வரி நிம்மதியாய் பேச விட்ட நவ்ஜீவ் கடிந்து கொண்டான்.

நவ்ஜீவ்: ‘கடியா இருக்கு. சப்பையா சொன்னாப் புரியும்ல.’

ராசா எல்லாரும் யோக்கியம்னா இம்மாம் பெரிய கோயிலும் சவரும் எதுக்கு? கட்டினவன் சரியானத் தீவிரவாதி. அதான். அவனுக்கு பிடிச்ச மதத்த எல்லாத்துக்கும் காண்பிக்கனும்னு வெறி பிடிச்சு கட்டிப்புட்டான். அவன் ஏன் கல்லுல கட்டனும்? அத முதல்ல சொல்லு. அவன் சேதி சொல்ல வரான். 1000 வருஷம் கடந்தும் தானும் தான் நம்பின சித்தாந்தமும் நிக்கனம்னு. 100 அடி விமானமும் … 20 அடி சிலையும் … எல்லாம் உரக்க சொல்லும்னு நம்பினான்.

அகம்: நீங்க சோழ ராசாக்கள தான சொல்றீங்க?

நவ்ஜீவ்: ஆக முதல் கேப்பிடலிஸ்ட்டு அவன் தான். ஆனா பொதுவா தான் சொன்னேன்.

அகம்: நினைச்சேன். கோவில நீங்க சொல்ற மாதிரி சர்வ சாதாரணமா பாத்திரம் அடுக்கிற மாதிரி அடுக்கிட முடியாது. தீவிரத்துக்கு எடமே இல்லனு சொல்ல வர்ல. ஆனா அது இலக்கு கிடையாது.

ஆகமம் தான் ஆதாரம். வடிக்கப் போற ஒவ்வொரு சிற்பத்துக்கும் அளவு இருக்கு. வடிவத்தோட அங்கம், அளவு எல்லாமே கணிதம் மாதிரி தான். சிற்பி ஒரு தியான சுலோகத்தோட தான் செதுக்கவே ஆரம்பிப்பான். பெரிய கோயில் துவார பாலகர் கம்பீரம்னா … தாரசுரத்தலையும், புள்ளமங்கைலையும் ஒன்னு ரெண்டு அடிக்குள்ள செதுக்கின சிற்பமும் படைப்பு தான். இங்கு தீவிர புடலங்காய்க்கு என்ன வேல வந்தது.

சிம்பிளா சொல்லனும்னா … இதெல்லாம் களியாட்டம். ஆனா, நிதானத்தோடு, பிரக்ஞையோடு ஆடினது.

நவ்ஜீவ்: அடிச்சு விடுங்க. அவ்ளோ யோக்கியன்னா எதுக்கு இத்தனப் போர்? இவனுங்கக் கையில இரத்தக் கரையே இல்லன்னு சொல்றீங்களா? பேசாமக் கோயிலக் கட்டி விட்டு போயிருக்கட்டுமே!

அகம்: அப்படி நான் சொல்லலையே.

நவ்ஜீவ்: Democracy was made a mock. என்ன சப்பைக்கட்டு கட்டினாலும்! What we have is only the history of imperials! Chalukyas … Cholas … Nayaks..

அகம்: எனக்கும் போர் குறித்த கருத்துக்கள் உண்டு. ஆனா democracy பிழைச்சுதான்னு தெரிஞ்சுக்கனும்னா உத்திரமேரூர் கல்வெட்டுக்களைப் பாருங்க. போர் அரசர்களுக்கு தான். மற்றப் படி, சட்டங்கள் அமைப்போடு  தான் இருந்தன. இல்லாட்டி எந்தக் காலத்துலையும் ஒரு சமூகத்த உயிர்ப்போடத் தக்க வைக்க முடியாது.

நவ்ஜீவ்: பழசுனால்லே உங்களுக்கு பிடிக்கும்னு இப்போ தெரியுது.

அகம்: பழச ஒதுக்கறதும் இல்ல. புதுச வெறுப்பதும் இல்ல.

நவ்ஜீவ்: அப்போ எப்படி தான் வரலாற்றப் புரிஞ்சுக்க?

அகம்: பாரத விளக்கே.. சமூக விடுதலைக்காக வந்த அறச் சீற்றமே. அக்கினியே. அக்கினிக் குஞ்சே!

நவ்ஜீவ்: கலாய்க்காதீங்க. விஷயத்துக்கு வாங்க.

அகம்: வரலாறும் நிகழ் போலத் தான் … அர்த்தமும் அனர்த்தமும், சார்பும் வெறுப்பும், கணிவும் கொரூரமும், போரும் துறவும், வேகமும் மந்தமும் என அனைத்தும் நிகழ்வின் ஓர் கணம் போலவே, வரலாற்றின் ஓர் கணமும். வரலாறு ஆயிரமாயிரம் பக்கங்கள் கொண்டது. சில பக்கங்களைப் புரட்டி விட்டு, பதற்றம் ஆவதை விட, படிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது

ஒற்றைப் படையான வாசித்தல் என்பதைக் கடந்து, இத்தகு வாதத்தில் சரக்கில்லை. இவர்கள் எவரேனும் வரலாற்றின் சாராம்சத்தை உணர்ந்துவிட்டேன் என சொல்வதாயிருந்தால், நான் நம்புவதற்கில்லை. காரணம் வரலாற்றுக்கு சாராம்சம் தரும் நோக்கம் முதன்மையில் இல்லை.

நவ்ஜீவ்: கடைசியா என்னத்த சொல்ற? நான் முன்னாடி போகவேக் கூடாதா? கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சா, பிடிக்காதே.

அகம்: வித்தியாசமா யோசிக்கிறேன் என்று எந்த ஞானியும் சொன்னதில்லை. காரணம் உண்மையை நோக்கி போறவனுக்கு தன்னை வித்தியாசப்படுத்தி, அந்நியப் படுத்தி என்ன இலாபம் வரப்போகிறது.

நவ்ஜீவ்: அப்போ சாதாரணமா ஆயிரம் அடிக்கு இருக்க வேண்டி தானே கோயில்லாம். தஞ்சை ஜில்லாவுல மட்டும் ஒடுங்கி கிடக்க வேண்டிதானே இராசாக்கள்லாம்.

அகம்: உன் நிலைக்கு, எல்லா கனவுகளும் போலியாகத் தான் தெரியும். ஆனால் அவை ஒரு சமூக நகர்விற்கு தேவை. நல்லவன் என்ற மாயை கிழிந்தப் பின், இவை உன்னிடம் பேசும் அந்தரங்கமாக.

நவ்ஜீவ்: முடிவா?

அகம்:

ஒரு கணம் நில்லு, உலகம் சுழலட்டும்

உருளும் வரலாற்று தாயம் நிற்கட்டும்

நவ்ஜீவ் கடுப்பாகி, தன்னுள் பேசிய அகம் டீவியை சிவிட்ச் ஆப் செய்தான்.

   – ஆர்.கே.ஜீ.

https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-writing-on-the-wall/article5986867.ece

“The election system had features only constitutional experts could have thought of. The village was divided into 30 wards, one representative elected for each. The candidate for instance, needed minimum educational qualification, had to be between 35 and 70 years of age, own landed property, have a house built in his own land, and be a tax-payer.”

uthiramerur-inscription2.jpg

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s